/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சீரமைப்பு பணிக்காக மூடப்பட்ட மேம்பாலம்; வியாபாரிகள் கோரிக்கையால் மீண்டும் திறப்பு
/
சீரமைப்பு பணிக்காக மூடப்பட்ட மேம்பாலம்; வியாபாரிகள் கோரிக்கையால் மீண்டும் திறப்பு
சீரமைப்பு பணிக்காக மூடப்பட்ட மேம்பாலம்; வியாபாரிகள் கோரிக்கையால் மீண்டும் திறப்பு
சீரமைப்பு பணிக்காக மூடப்பட்ட மேம்பாலம்; வியாபாரிகள் கோரிக்கையால் மீண்டும் திறப்பு
ADDED : டிச 26, 2024 07:04 AM

திண்டிவனம், டிச. 26-
மேம்பாலம் சீரமைப்பு பணிக்காக மூடப்பட்ட திண்டிவனம் மேம்பாலத்தின் நான்கு சாலைகளும், வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் வாகன போக்குவரத்திற்காக திறக்கப்பட்டன.
திண்டிவனம் மேம்பாலம் கட்டப்பட்டு, 23 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. பாலத்தின் மையப்பகுதியான ரவுண்டானாவை தாங்கி நிற்கும் துாண்கள் வலுவிழந்துள்ளதாலும், நான்கு சாலைகளிலும் இணைப்பு பகுதிகள் சரியாக இல்லாததால், சீரமைக்க முடிவு செய்தனர்.
கடந்த 24ம் தேதி முதல் ஜன., 10ம் தேதி வரை சீரமைப்பு பணிக்காக மேம்பாலத்தின் நான்கு வழிகளும் மூடப்படும் என்று நெடுஞ்சாலை துறை அறிவித்தது.
நேற்று முன்தினம் இரவு 7.00 மணியளவில் பாலத்தின் நான்கு வழிகளும் மூடப்பட்டதால் நகரமே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது.
இந்நிலையில், நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் பாலம் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் தரப்பில் சப்கலெக்டர் திவ்யான்சு நிகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது, சப்கலெக்டர் உத்தரவின் பேரில், நேற்று காலை 11.00 மணியளவில் மூடப்பட்ட பாலத்தின் நான்கு வழிகளும் மீண்டும் திறக்கப்பட்டன.
பாலத்தில் சீரமைப்பு பணி மேற்கொள்ள, இன்று (26ம் தேதி) திண்டிவனம் சப்கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரிகள் சங்கம், வருவாய், நெடுஞ்சாலை தறை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் சப் கலெக்டர் தலைமையில் காலை 10.00 மணிக்கு நடக்க உள்ளது. இதில் மேம்பாலம் சீரமைப்பு பணி எப்போது துவங்கும் என்று முறையாக அறிவிக்கப்பட உள்ளது.