/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் மாஜி காங்., எம்.எல்.ஏ., மரணம்
/
திண்டிவனம் மாஜி காங்., எம்.எல்.ஏ., மரணம்
ADDED : நவ 26, 2025 08:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தை சேர்ந்த முன்னாள் காங்., எம்.எல்.ஏ., உடல்நல குறைவால் இறந்தார்.
திண்டிவனம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 73; இவர் திண்டிவனம் சட்டசபை தொகுதியில் கடந்த 1991ல் எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றவர்.
நகர காங்., கமிட்டி தலைவராக பதவி வகித்தவர். உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் இறந்தார்.
அவரது உடலுக்கு பல்வேறு கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

