/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் கோவில் உண்டியலை பெயர்த்து எடுத்து சென்ற மர்ம நபர்கள்

ADDED : நவ 26, 2025 08:11 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் கோவில் உண்டியலை பெயர்த்தெடுத்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி ருகின்றனர்.
விழுப்புரம் கே.கே.ரோடு, முத்தமிழ் நகர் பகுதியில் ராஜகணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்தது. முருகர் சன்னதியில், கடந்த மாதம் சூரசம்ஹார விழாவும் நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு கோவில் இரும்பு கேட் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், கோவில் வளாகத்திலிருந்த இரும்பு உண்டியலை உடைத்து, பெயர்த்து எடுத்துச்சென்றுள்ளனர்.
நேற்று காலை கோவிலை திறக்க வந்த நிர்வாகத்தினர், இரும்பு கேட் பூட்டு உடைக்கப்பட்டு, உண்டியல் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் கல்பனா தலைமையிலான போலீசார் தடயங்களை சேகரித்தனர். அங்குள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சமீபத்தில் திருவிழாவும், வாராந்திர பூஜைகளும் நடந்து வந்ததால், உண்டியலில் ரூ.20 ஆயிரத்திற்கும் அதிக தொகை இருந்திருக்கும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.