/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'மாஜி' அமைச்சரின் பேச்சு; சமூக வலைதளங்களில் வைரல்
/
'மாஜி' அமைச்சரின் பேச்சு; சமூக வலைதளங்களில் வைரல்
ADDED : அக் 14, 2025 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விழுப்புரத்தில் அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு, இதன் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சண்முகம் நிர்வாகிகளின் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
அப்போது அவர் ஒரு கூட்டத்தில் பேசுகையில், 'பொங்கல் பண்டிகை முடிந்த கையோடு, சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும். இன்னும் மூன்று, நான்கு மாதங்கள் மட்டுமே உள்ளது என்றார்.
மேலும், பெண்கள் குறித்து அவர் பேசியது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.