/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி நினைவு நாள்
/
முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி நினைவு நாள்
ADDED : ஏப் 07, 2025 06:41 AM

விழுப்புரம்; விழுப்புரத்தில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி நினைவு நாள் நேற்று அனுசரிக்கப் பட்டது.
அத்தியூர் திருவாதியில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க., மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, புகழேந்தி படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.
மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், ஒன்றிய செயலாளர்கள் முருகவேல், மும்மூர்த்தி, தெய்வசிகாமணி, பிரபாகரன், நகர செயலாளர் சக்கரை.
ஒன்றிய சேர்மன்கள் சச்சிதானந்தம், வாசன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் புகழ் செல்வக்குமார், ஒன்றிய கவுன்சிலர் வெற்றிச்செல்வி கணபதி, வளவனுார் பேரூராட்சி செயலாளர் ஜீவா, பொதுக்குழு உறுப்பினர் சம்பத்.
மாவட்ட கவுன்சிலர்கள் ஹரிராமன், கேசவன், ஒன்றிய நிர்வாகிகள் தேவகிருஷ்ணன், கண்ணப்பன், கலியமூர்த்தி, சடகோபன், ஜெயா பன்னீர் செல்வம், ஜெகதீசன், துணை சேர்மன் உதயகுமார் உள்ளிட்ட கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

