/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'பாம்பின் கால் பாம்பறியும்' கில்லாடி 'மாஜி' எம்.எல்.ஏ.,க்கள்
/
'பாம்பின் கால் பாம்பறியும்' கில்லாடி 'மாஜி' எம்.எல்.ஏ.,க்கள்
'பாம்பின் கால் பாம்பறியும்' கில்லாடி 'மாஜி' எம்.எல்.ஏ.,க்கள்
'பாம்பின் கால் பாம்பறியும்' கில்லாடி 'மாஜி' எம்.எல்.ஏ.,க்கள்
ADDED : மார் 18, 2025 04:55 AM

தி.மு.க., அரசின் டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து பா.ஜ., சார்பில், சென்னையில் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கள்ளக்குறிச்சியில், மாவட்ட தலைவர் பாலசுந்தரம் உட்பட 3 பேரை, போலீசார் வீட்டுக் காவலில் வைத்தனர். நேற்று காலை சென்னைக்கு புறப்பட்ட பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல், விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் விநாயகம், இளைஞரணி தலைவர் சுரேஷ் உள்ளிட்டோர் நேற்று காலை சென்னைக்கு புறப்பட்டனர். செங்கல்பட்டு அருகே, அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
சென்னை போராட்டத்திற்கு பா.ஜ., நிர்வாகிகள் செல்வதை தடுப்பதற்கு போலீசார் திட்டமிட்டிருந்தனர். இதனை அறிந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சம்பத், கலிவரதன், தெற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், முன் கூட்டியே சென்னை சென்று விட்டனர்.
சென்னையில் நேற்று காலை மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், இவர்கள் திட்டமிட்டபடி பங்கேற்று கைதாகினர்.
இது பற்றி கட்சி நிர்வாகிகள் கூறுகையில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் இருவருமே, தி.மு.க.,வில் இருந்தவர்கள். 'பாம்பின் கால் பாம்பறியும்' தி.மு.க., ஆட்சியின் அசைவுகள் இவர்களுக்கு தெரியாதா என்றனர்.