/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குளம் மறுசீரமைப்பு முன்னாள் எம்.பி., ஆய்வு
/
குளம் மறுசீரமைப்பு முன்னாள் எம்.பி., ஆய்வு
ADDED : நவ 12, 2025 06:49 AM

கண்டாச்சிபுரம்: முகையூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் குளம் மறுசீரமைப்பு பணியினை முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி பார்வையிட்டார்.
கண்டாச்சிபுரம் தாலுகாவிற்குட்பட்ட முகையூர் ஊராட்சியில் உள்ள குளம் படிகட்டுகள் மற்றும் கரைகள் சரிந்த நிலையில் இருந்தது. மேலும் குளம் முழுதும் ஆகயத்தாமரை நிறைந்து தண்ணீர் மாசடைந்து இருந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் படி தற்போது குளத்தில் குளக்கரை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியிணை முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்டக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், ஊராட்சி தலைவர் லுாயிஸ், ஒன்றிய நிர்வாகிகள் மும்மூர்த்தி, ஓம்சிவசக்திவேல், முருகையன், சாந்தகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

