/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாஜி ஊராட்சி தலைவருக்கு 'திடீர்' வலிப்பு
/
மாஜி ஊராட்சி தலைவருக்கு 'திடீர்' வலிப்பு
ADDED : ஆக 28, 2025 11:58 PM

திண்டிவனம்: கும்பாபிேஷகத்திற்கு வந்த முன்னாள் ஊராட்சி தலைவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒலக்கூர் ஒன்றியம், செம்பாக்கம் கிராமம், விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் நேற்று காலை 10:00 மணியளவில் நடந்தது.
இதில் கலந்து கொள்ள தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, மாவட்ட அவைத்தலைவர் சேகர் உள்ளிட்டோர் அங்கு சென்றனர். அப்போது கும்பாபிேஷகத்திற்கு வந்த, செம்பாக்கம் முன்னாள் ஊராட்சி தலைவர் கலியபெருமாளுக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டது.
அவர், வாயில் நுரை தள்ளியபடி கீழே விழுந்தார். அப்போது அங்கிருந்த தி.மு.க., பிரமுகர்கள் மாசிலாமணி மற்றும் சேகர் ஆகிய இருவரும் டாக்டர்கள் என்பதால், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.
தக்க சமயத்தில் அளித்த முதலுதவி சிகிச்சை நெகிழ்ச் சியை ஏற்படுத்தியது.

