/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் கைலாசநாதர் கோவில் நுழைவு வாயில் அடிக்கல் நாட்டு விழா
/
விழுப்புரம் கைலாசநாதர் கோவில் நுழைவு வாயில் அடிக்கல் நாட்டு விழா
விழுப்புரம் கைலாசநாதர் கோவில் நுழைவு வாயில் அடிக்கல் நாட்டு விழா
விழுப்புரம் கைலாசநாதர் கோவில் நுழைவு வாயில் அடிக்கல் நாட்டு விழா
ADDED : செப் 07, 2025 05:23 AM

விழுப்புரம்: விழுப்புரம் கைலாசநாதர் கோவில் முன் நுழைவு வாயில் (ஆர்ச்) கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
விழுப்புரத்தில் பிரஹந்நாயகி சமேத கைலாசநாதர் திருக்கோவில் முன், புதிய அலங்கார நுழைவு வாயில் (ஆர்ச்) கோவில் எதிரே முகப்பு பகுதியில் வடக்கு தெரு - திரு.வி.க.வீதி சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட உள்ளது. ஆர்ச் மீது, கைலாசநாதர், விநாயகர், முருகர், நந்தி சிலைகள் அமைகிறது.
இதற்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவிற்கு, லட்சுமணன் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டினார். நகராட்சி கமிஷனர் வசந்தி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் சிவக்குமார், நிர்வாகிகள் கலைச்செல்வி, ரவிச்சந்திரன், அர்ச்சகர் ரஞ்சித், தி.மு.க., நகர பொறுப்பாளர் வெற்றிவேல், கவுன்சிலர்கள் அன்சர்அலி, தங்கம், நிர்வாகிகள் முகமதுஅலி, கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி, புகழேந்தி, ராஜி மற்றும் கோவில் நிர்வாகிகள் பக்தர்கள் பங்கேற்றனர்.