/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.50 லட்சத்தில் சமுதாய கூடம் அடிக்கல் நாட்டு விழா
/
ரூ.50 லட்சத்தில் சமுதாய கூடம் அடிக்கல் நாட்டு விழா
ரூ.50 லட்சத்தில் சமுதாய கூடம் அடிக்கல் நாட்டு விழா
ரூ.50 லட்சத்தில் சமுதாய கூடம் அடிக்கல் நாட்டு விழா
ADDED : ஜூலை 19, 2025 02:55 AM

விழுப்புரம் : வளவனுார் பேரூராட்சியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள சமுதாய கூடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
திருவள்ளுவர் நகரில், ஆதிதிராவிடர் நலன் அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 50 லட்சம் ரூபாயில் புதிய சமுதாய கூடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
விழாவிற்கு பேரூராட்சி சேர்மன் மீனாட்சி ஜீவா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயலாளர் அண்ணாதுரை வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் லட்சுமணன் எம்.எல்.ஏ., பூமி பூஜை நடத்தி, அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.
தி.மு.க., பேரூராட்சி செயலாளர் ஜீவா, இளநிலை பொறியாளர் இக்பால், பொதுக்குழு உறுப்பினர் சம்பத், துணைத் தலைவர் அசோக், வழக்கறிஞர் கண்ணப்பன், விவசாய அணி கேசவன், நிர்வாகிகள் சரபோஜி, ராஜன், ராஜேந்திரன், கவுன்சிலர்கள் சசிகலா, மகாலட்சுமி, சந்திராவடிவேல், யுவராஜா, ஆரிஸ், பாஸ்கரன், சிவசங்கரி, பார்த்திபன், கீதா, உமாமகேஸ்வரி, பத்மாவதி மற்றும் பலர் பங்கேற்றனர்.