/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேளாண் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
/
வேளாண் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
ADDED : செப் 22, 2025 11:31 PM

மயிலம் : மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டில் வட்டார வேளாண் அலுவலகம் 2 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
விழாவிற்கு, மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். மயிலம் ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி, வேளாண்மை உதவி இயக்குனர் மகாலட்சுமி, பி.டி.ஓ.,க்கள் சிவக்குமார், இளங்கோ முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் நிவேதிதா வரவேற்றார்.
சிவக்குமார் எம்.எல்.ஏ, தி.மு.க., வடக்கு மாவட்ட அவைத் தலைவர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன் பேசினர். மாநில தீர்மானக் குழு உறுப்பினர் சிவா, வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், மாவட்ட பிரதிநிதிகள் பிரகாஷ், சேகர், மாவட்ட சிறுபான்மை பிரிவு அன்சாரி, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பாஸ்கர், மயிலம் ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார், பா.ம.க., ஒன்றிய செயலாளர் தேசிங்கு, தி.மு.க., இளைஞர் அணி கார்த்தி, பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.