/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா
ADDED : டிச 12, 2025 06:19 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வளவனுார், சிறுவந்தாடு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
வளவனுார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்த விழாவிற்கு, மாவட்ட கல்வி அலுவலர் சேகர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
வழக்கறிஞர் கண்ணப்பன், வளவனுார் சேர்மன் மீனாட்சி ஜீவா, கண்டமங்கலம் சேர்மன் வாசன், கோலியனுார் சேர்மன் சச்சிதானந்தம் முன்னிலை வகித்தனர்.
வளவனுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 151 பேருக்கும், வளவனுார் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவிகள் 281 பேருக்கும், சிறுவந்தாடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 33 பேருக்கும் என 465 பேருக்கு, 19.27 லட்சம் மதிப்பில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
தி.மு.க., பேரூராட்சி செயலாளர் ஜீவா, பொதுக்குழு உறுப்பினர் சம்பத், வழக்கறிஞர் சுரேஷ், துணை தலைவர் அசோக், நெசவாளர் அணி கனகராஜ், பொருளாளர் ரகுமான், நகர துணைச் செயலாளர் ராஜேந்திரன்.
மாவட்ட பிரதிநிதி ராஜன், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜசேகர், பேரூராட்சி கவுன்சிலர்கள் சசிகலா, மகாலட்சுமி, சந்திரா, வடிவேல், பார்த்திபன், நகர இளைஞரணி மணிகண்டன்.
ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார், வார்டு செயலாளர்கள் ராம்குமார், பெரியசாமி, சரநாரயணன், ஜாபர்அலி, முருகன், சிவா, சுற்றுச்சூழல் அணி முத்துசாமி, ராம், வழக்கறிஞர் ஜெயபால்.
அயலக அணி ரஞ்சித்குமார், நகர தகவல் தொழில்நுட்ப அணி ராஜேஷ், விவசாய தொழிலாளரணி பிரபாகரன், இளைஞரணி விஜயகுமார், அருண் பிரகாஷ், ஆனந்த்ராஜ், மாணவரணி சுகன், கோட்டீஸ்வரன், முருகதாஸ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

