/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கப்பியாம்புலியூரில் சப்வே உறுதி நகாய் அதிகாரிகள் விரைவில் ஆய்வு
/
கப்பியாம்புலியூரில் சப்வே உறுதி நகாய் அதிகாரிகள் விரைவில் ஆய்வு
கப்பியாம்புலியூரில் சப்வே உறுதி நகாய் அதிகாரிகள் விரைவில் ஆய்வு
கப்பியாம்புலியூரில் சப்வே உறுதி நகாய் அதிகாரிகள் விரைவில் ஆய்வு
ADDED : டிச 12, 2025 06:00 AM

விழுப்புரம்: விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூரில் சப்வே அமைப்பது குறித்து, நகாய் அதிகாரிகள் ஆய்வு நடத்திட, முடிவு செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியம், கப்பியாம்புலியூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தஞ்சாவூர் - கும்பகோணம் நான்கு வழிச் சாலையோரம் உள்ளது. இப்பகுதியில் பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் சாலையை கடந்து செல்லும் போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்கும் வகையில், நான்கு வழிச்சாலையில் பள்ளி எதிரே சப்வே அமைக்க வலியுறுத்தி, கடந்த 26ம் தேதி, கும்பகோணம் - சென்னை சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்னை தொடர்பாக, விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமையில், சமாதானக் கூட்டம் நேற்று நடந்தது.
விக்கிரவாண்டி தாசில்தார் செல்வமூர்த்தி, ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளர் வசந்த கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், துணை பி.டி.ஓ., காஞ்சனா, நகாய் அதிகாரிகள் செல்வராஜ், ஸ்ரீநித்திஷ், பன்னீர்செல்வம், வினோத் துரை, ஒப்பந்ததாரர் மணி செல்வம், கப்பியாம்புலியூர் ஊராட்சி தலைவர் வளர்மதி, அரசு ஒப்பந்ததாரர்கள் ராஜேந்திரன், பிரசாத், தி.மு.க., கிளை செயலாளர் மோகன், ஊர் பிரமுகர்கள் விநாயகம், சேகர், குமார், ராமலிங்கம், ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆர்.டி.ஓ., முருகேசன் பேசுகையில், 'கப்பியாம்புலியூரில் சப்வே அமைக்க, நஹாய் அதிகாரிகள் மூலம் நேரில் ஆய்வு நடத்தப்படும். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சப் வே அமைப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.

