/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடியிருப்புகளை சூழ்ந்த கழிவுநீர் இனி யாரிடம் புகார் தெரிவிப்பது காணாமல் போன நகராட்சி அதிகாரிகள்

ADDED : டிச 12, 2025 05:57 AM

விழுப்புரம்: விழுப்புரம் வண்டிமேடு, இந்திராகாந்தி வீதியில் நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதாள சாக்கடை கழிவுநீர் வீடுகளை சூழ்ந்துள்ளது.
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வண்டிமேடு, நியூ ஸ்டேட் பேங்க் காலனி, இந்திராகாந்தி வீதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சில தினங்களாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி, வீடுகளின் முன்பு தேங்கியுள்ளது.
வீடுகளை சூழ்ந்துள்ள கழிவுநீரால் வீட்டிலிருந்து வெளிய வர முடியாமல் குடியிருப்புவாசிகள் தவித்து வருகின்றனர்.
மேலும், பல நாட்களாக கழிவுநீர் தேங்கியிருப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி 10க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து சில தினங்களுக்கு முன் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. ஆனால், நகராட்சி அதிகாரிகள் அலட்சிய போக்கை கடைபிடிக்கின்றனர்.
மக்கள் வீதிக்கு வந்து போராடினால் மட்டுமே நடவடிக்கை எடுக்கும் நகராட்சி நிர்வாகம், அந்த கோரிக்கைகளை புகாராக தெரிவித்தால் அதற்கு தீர்வு காண தயங்குகின்றனர்.
இப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் கூட கண்டுகொள்ளாதது அப்பகுதி மக்களை அதிருப்திக்குள்ளாகியுள்ளது. இனியும் தாமதிக்காமல் கழிவுநீர் சீரமைப்பு நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.