/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை துவக்கி வைப்பு
/
செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை துவக்கி வைப்பு
செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை துவக்கி வைப்பு
செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை துவக்கி வைப்பு
ADDED : டிச 11, 2025 05:45 AM

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2025 - -2026 ஆண்டுக்கான கரும்பு அரவை துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். ஆலை மேலாண்மை இயக்குனர் முத்து மீனாட்சி, ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தி சக்திவேல், ஊராட்சித் தலைவர் வீரப்பன், துணைத்தலைவர் சக்கரவர்த்தி வரவேற்றனர். எம்.எல்.ஏ., மணிகண்ணன் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் சந்திரசேகரன், விஸ்வநாதன் ஒன்றிய சேர்மன் ஓம்சிவ சக்திவேல் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் எம்.எல்.ஏ., பொன்முடி கரும்பு அரவையை துவக்கி வைத்து பேசினார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நிர்மல்ராஜ்,ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் வெங்கடேசன்,மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் காவிய வேந்தன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட அவை தலைவர் ரகோத்தமன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பாக்யராஜ் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் முருகன் ஒன்றிய செயலாளர் திருவரங்கன் உட்பட பொதுமக்கள் விவசாயிகள் அலுவலக ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.

