/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
/
இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
ADDED : ஜன 09, 2026 07:51 AM

கண்டாச்சிபுரம்: முகையூர் அடுத்த ஆலம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருக்கோவிலுார் தொகுதி எம்.எல்.ஏ., பொன்முடி தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் கவுதமி சிகாமணி, மாவட்ட கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், ராஜிவ் காந்தி முன்னிலை வகித்தனர். விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் உதயசூரியன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் 7 லட்சம் ரூபாய் சுமார் மதிப்பிலான சைக்கிள்களை 82 மாணவர்களுக்கும், 64 மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது.
முகையூர் சேர்மன் தனலட்சுமி உமேஸ்வரன், துணைத் தலைவர் மணிவண்ணன், முகையூர் ஊராட்சி தலைவர் லுாயிஸ், ஒன்றிய கவுன்சிலர் ராஜராஜேஸ்வரி கோபால், ஊராட்சித் தலைவர் ராஜகுமாரி சக்திவேல், பெற்றோர் ஆசிரிய சங்கத் தலைவர் கோபால், முகையூர் ஒன்றிய நிர்வாகிகள் காத்தவராயன், ராமநாதன், சாந்தகுமார் பங்கேற்றனர். தலைமையாசிரியர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.

