/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டமானடி அரசு பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கல்
/
கண்டமானடி அரசு பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கல்
கண்டமானடி அரசு பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கல்
கண்டமானடி அரசு பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கல்
ADDED : நவ 20, 2025 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: கண்டமானடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
விழுப்புரம் அருகே கோலியனுார் ஒன்றியம் கண்டமானடி அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில், பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
தலைமை ஆசிரியர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். ஊராட்சி துணை தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் ஏழுமலை சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பிளஸ் 1 மாணவ, மாணவிகள் 67 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். கல்வி மேலாண்மை குழு நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.