/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜூடோ போட்டியில் மாநில அளவில் 2ம் இடம்: விழுப்புரம் மாணவிகள் சாதனை
/
ஜூடோ போட்டியில் மாநில அளவில் 2ம் இடம்: விழுப்புரம் மாணவிகள் சாதனை
ஜூடோ போட்டியில் மாநில அளவில் 2ம் இடம்: விழுப்புரம் மாணவிகள் சாதனை
ஜூடோ போட்டியில் மாநில அளவில் 2ம் இடம்: விழுப்புரம் மாணவிகள் சாதனை
ADDED : நவ 20, 2025 05:35 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மாணவிகள் இருவர், ஜூடோ போட்டியில், மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்து, பரிசு கோப்பை வென்று சாதனை படைத்தனர்.
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான ஜூடோ போட்டி, கரூரில் கடந்த 5ம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடந்தது.
இப்போட்டியில், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, விழுப்புரத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி கவுசிகா, 44 கிலோ எடை பிரிவில் (ஓபன் வெயிட் பிரிவு) கலந்துகொண்டு சிறப்பாக விளையாடினார். இவர், மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று, பதக்கத்துடன் விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதேபோல், சென்னையில் கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
இதில், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து ஜூடோ விளையாட்டு போட்டியில், கல்லுாரி மாணவி கோகிலாம்பாள் 70 கிலோவுக்கும் மேற்பட்ட ஓபன் வெயிட் பிரிவில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி, இரண்டாமிடம் பிடித்தார்.
அவருக்கு முதல்வர் கோப்பையும், ரூபாய் 75 ஆயிரம், பரிசு தொகையும் வழங்கப்பட்டது. முதல்வர் கோப்பை பரிசு பெற்று வந்த மாணவியை, தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்க தலைவர் சகிலன் தலைமையில், விழுப்புரம் மாவட்ட சங்க நிர்வாகிகள் ரூ.50,000- பரிசுத்தொகை வழங்கி பாராட்டினர்.
இந்த சாதனை மாணவிகள் கவுசிகா, கோகிலாம்பாள் ஆகியோருக்கு பயிற்சியளித்து வரும், விழுப்புரம் சோழா விளையாட்டு அகாடமி பயிற்றுனர் சென்செய் குணசேகரனையும் பாராட்டினர்.

