/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி
ADDED : ஜன 04, 2025 05:20 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், தன்னார்வ பயிலும் வட்டத்தில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு, பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப்பணிகளில் சேர்ந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப் படவுள்ள டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 8ம் தேதி தொடங்கி (திங்கள் முதல் வெள்ளி) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடைய விரும்பும் நபர்கள், 7ம் தேதிக்குள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.