ADDED : ஜன 23, 2025 05:37 AM
செஞ்சி: மேல்ஒலக்கூர் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
வல்லம் ஒன்றியம் மேல்ஒலக்கூர் கிராமத்தில் பாரத் மித்ரன் சமூக பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
அறக்கட்டளை நிறுவனர் முருகவேல் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஜோலாதாஸ் வரவேற்றார். வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் முகாமை துவக்கி வைத்தார். வழக்கறிஞர்கள் சக்திவேல், சத்தியசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் கண் குறைபாடுகளை பரிசோதனை செய்தனர். மருத்துவ குழு ஒருங்கிணைப்பாளர் ராகவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் 125 பேர் கண் பரிசோதனை செய்து கொண்டனர். ஊராட்சி ஒருங்கிணப்பாளர் சத்தியா நன்றி கூறினார்.