/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இலவச சட்ட உதவி விழிப்புணர்வு முகாம்
/
இலவச சட்ட உதவி விழிப்புணர்வு முகாம்
ADDED : டிச 01, 2025 05:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: வானுார் நீதிமன்ற இலவச சட்ட உதவிகள் வட்ட சட்டப்பணிக்குழு சார்பில் அம்புழுகை கிராமத்தில் இலவச சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வானுார் நீதிமன்ற மாஜிஸ்திரேட் பொன்வேந்தன் இலவச சட்ட உதவி குறித்து சிறப்புரையாற்றினார். முகாமில், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள், அதன் மூலம் வழங்கப்படும் சட்ட உதவிகள் குறித்து விளக்கப்பட்டது. ஊராட்சி தலைவர் குழந்தைவேலு வரவேற்றார். வானுார் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜானகிராமன், அரசு வழக்கறிஞர் ஆறுமுகம் மற்றும் வழக்கறிஞர்கள் பேசினர். முகாமில் கிராம மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது.

