/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காங்., மாவட்ட சீரமைப்பு கருத்து கேட்பு கூட்டம்
/
காங்., மாவட்ட சீரமைப்பு கருத்து கேட்பு கூட்டம்
ADDED : டிச 01, 2025 05:27 AM

செஞ்சி: செஞ்சியில் காங்., சீரமைப்புக்கான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ரங்கபூபதி, நகர தலைவர்கள் சூர்யமூர்த்தி, முகமது இட்ரிஸ் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் சக்திவேல் வரவேற்றார்.
மேலிட பார்வையாளர் வெங்கட் சிறப்புரையாற்றி, கட்சியினரிடம் நிர்வாகிகள் நியமனம் செய்வது குறித்து கருத்து கேட்டார்.
பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணன், தினகரன், வட்டார தலைவர் அன்புசெழியன், மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார், விவசாய பிரிவு ஜோலாதாஸ், லட்சுமி, வட்டார தலைவர்கள் செல்வம், இளவழகன், காத்தவராயன், நகர தலைவர் குமார், நிர்வாகிகள் சண்முகம், சையத் மாலிக் உட்பட பலர் பங்கேற்றனர்.

