ADDED : ஏப் 02, 2025 03:39 AM

விழுப்புரம்: சரஸ்வதி கல்வி குழுமம், ஸ்ரீ அண்ணாமலை கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
விழுப்புரம் அடுத்த வி.பாளையம் சரஸ்வதி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளியில், புதுச்சேரி வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய முகாமை, சரஸ்வதி பள்ளி முதன்மை தாளாளர் ராஜசேகரன் துவக்கி வைத்தார்.
பொருளாளர் சிதம்பரநாதன், தாளாளர் முத்துசரவணன் சிறப்புரையாற்றினர்.
முகாமில், வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதன்மை டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் லோகநாதன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினர். முகாம் ஏற்பாடுகளை பொது மேலாளர் பக்தவச்சலம் செய்திருந்தார்.
இதில், 150 பேர் பயனடைந்தனர். 10 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

