ADDED : நவ 03, 2024 04:24 AM
கோட்டக்குப்பம்,: கோட்டக்குப்பம் கிஸ்வா சமூக நல அமைப்பு 10ம் ஆண்டுகள் நிறைவையொட்டி, இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து ஜாமியா மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடந்த முகாமை பிம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் துவக்கி வைத்தார். கிஸ்வா சங்க கவுரவ தலைவர் அப்துல் ஹக்கீம் வரவேற்றார்.
முகாமில், பிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், பொது மருத்துவம், மகப்பேறு, குழந்தை நலம், எலும்பு முறிவு, கண் சிகிச்சை, தோல், பிசியோதெரபி மற்றும் பெண்களுக்கான மருத்துவ சேவைகளை வழங்கினர். இதில் 500க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்தனர்.
நிகழ்ச்சியில், துணை மருத்துவ கண்காணிப்பாளர் வேலவன், கோட்டக்குப்பம் நகரமன்ற தலைவர் ஜெயமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் ரவி, முஹம்மது பாரூக், ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி, முன்னாள் பேரூராட்சி சேர்மன் அப்துல் ஹமீது மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
முகாமில், 10 ஆண்டு சேவையை அங்கிகரிக்கும் வகையில், கேடயங்கள் மற்றும் பரிசுபொருட்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
ஏற்பாடுகளை மருத்துவ ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரவூப், துணை தலைவர் முஹம்மது இலியாஸ், செயலாளர் அஜீஸ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.