ADDED : செப் 23, 2024 05:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : வளவனுாரில் பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையம் சார்பில் 80வது இலவச சிறப்பு தியான முகாம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை இலவச சிறப்பு தியான முகாம் நடந்தது.
முகாமில், வாழும் கலை, மன அழுத்தத்திலிருந்து விடுதலை, தற்கொலையிலிருந்து விடுவித்தல், ஆத்மா, பரமாத்மா குறித்த ஞான விளக்கங்கள் கற்பிக்கப்பட்டது.
முகாமில், வளவனுார் சுற்று பகுதி மக்கள் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் சுரேஷ் பங்கேற்றார்.