/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இளைஞர்களிடையே நட்புணர்வு விளையாட்டு போட்டி; ஆரோவில் அறக்கட்டளை அடுத்தக்கட்ட முயற்சி
/
இளைஞர்களிடையே நட்புணர்வு விளையாட்டு போட்டி; ஆரோவில் அறக்கட்டளை அடுத்தக்கட்ட முயற்சி
இளைஞர்களிடையே நட்புணர்வு விளையாட்டு போட்டி; ஆரோவில் அறக்கட்டளை அடுத்தக்கட்ட முயற்சி
இளைஞர்களிடையே நட்புணர்வு விளையாட்டு போட்டி; ஆரோவில் அறக்கட்டளை அடுத்தக்கட்ட முயற்சி
ADDED : நவ 06, 2024 11:19 PM
வானுார் ; கிராமப்புற இளைஞர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் விதமாக சர்வதேச ஆரோவில் அறக்கட்டளை, அடுத்தக்கட்டமாக விளையாட்டு போட்டி நடத்த முடிவெடுத்துள்ளது.
புதுச்சேரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் சர்வதேச நகரமான ஆரோவில் அமைந்துள்ளது. இங்கு இனம், மொழி, அரசியல் வேறுபாடியின்றி மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். உள்ளூர் வாசிகள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
இங்கு அன்னையின் கனவு திட்டங்களை நிறைவேற்றும் விதமாக ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி, துணை செயலாளர் சொர்ணாம்பிகா மற்றும் நிர்வாகிகள் தலைமையில் அடங்கியுள்ள குழுவினர் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஆரோவில் பகுதியை ஒட்டி இருக்கும் கிராமங்களில் வசிக்கும் இளைஞர்களிடையே ஆரோவில் உடனான ஒற்றுமை மற்றும் நட்பை வளர்க்கும் விதமாக விளையாட்டுப்போட்டிகள் நடத்தி வருகின்றனர்.
இதன் முதற்கட்டமாக கிராமப்புற இளைஞர்களிடையே டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி நடத்தி பரிசுகளை வழங்கியது. வெற்றி பெற்ற அணி வீரர்களை, புதுச்சேரி கவர்னரும், ஆரோவில் அறக்கட்டளை உறுப்பினருமான கைலாஷ்நாதன் கவுரவப்படுத்தினார். அடுத்தக்கட்டமாக குயிலாப்பாளையம் நியூ கிரேஷனில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கூடைப்பந்து மைதானத்தை ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி துவக்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக கிராமப்புற இளைஞர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் விதமாக கூடைப்பந்து, கைப்பந்து, பேட்மிட்டன் போன்ற போட்டிகள் அடுத்தடுத்து நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.
இதற்காக ஒவ்வொரு கிராமத்திலும், விளையாட்டு அணிகளிடம் ஆலோசனை நடத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
ஆரோவில் அறக்கட்டளை போட்டிகள் நடத்தி, வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு வழங்குவதோடு மட்டுமில்லாமல், பங்கேற்கும் அணிகளுக்கும் ஆறுதல் பரிசு வழங்கி குஷிப்படுத்துவதால், கிராமப்புற விளையாட்டு அணி இளைஞர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.