/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருவக்கரை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம்
/
திருவக்கரை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம்
ADDED : ஏப் 14, 2025 04:45 AM
வானூர்: திருவக்கரை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம் நடந்தது.
வானூர் அடுத்த திருவக்கரை வக்ரகாளியம்மன், சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு கோவில் மூலவருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட நறுமணப்பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
மாலை 6.00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள வக்ரகாளியம்மன், சந்திரமவுலீஸ்வரர், வரதராஜ பெருமாள், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
நள்ளிரவு இரவு 12:00 மணிக்கு பவுர்ணமியை முன்னிட்டு ஜோதி தரிசன வழிபாடு நடந்தது. ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை செயல் அலுவலர் ஜெயக்குமார், உதவி ஆணையாளர் சக்திவேல், ஆய்வாளர் உமாமகேஸ்வரி செய்திருந்தனர்.

