/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
1,700 இடங்களில் விநாயகர் சிலைகள்; பாதுகாப்பு பணிக்கு 1800 போலீசார் குவிப்பு
/
1,700 இடங்களில் விநாயகர் சிலைகள்; பாதுகாப்பு பணிக்கு 1800 போலீசார் குவிப்பு
1,700 இடங்களில் விநாயகர் சிலைகள்; பாதுகாப்பு பணிக்கு 1800 போலீசார் குவிப்பு
1,700 இடங்களில் விநாயகர் சிலைகள்; பாதுகாப்பு பணிக்கு 1800 போலீசார் குவிப்பு
ADDED : ஆக 27, 2025 07:10 AM

விழுப்புரம் : விநாயகர் சதுர்த்தியை யொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 1,700 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு பணியில் 1800 போலீசார் ஈடுபடுகின்றனர்.
முதன்மை கடவுளான விநாயகருக்கு ஆண்டுதோறும் முதல் பண்டிகையாக சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த பண்டிகை தினத்தில் பொதுமக்கள் தங்களின் வீடுகளில் வைத்து பூஜிக்க களிமண்ணால் ஆன விநாயகர் பொம்மைகள் பல வடிவங்களில் வாங்கி சென்று வழிபட்டு வருகின்றனர்.
மேலும், பொது இடங்களிலும் பிரமாண்டமான விநாயகர் சிலைகளை வைத்து வணங்குகின்றனர்.
இந்த சிலைகளை மூன்று மற்றும் ஐந்து நாட்கள் கழித்து நீர்நிலைகளில் கறைக்க ஊர்வலமாக கொண்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் இந்தாண்டிற்கான விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நேற்று முதல் விழுப்புரம் எம்.ஜி., ரோடு, பாகர்ஷா வீதிகளில் பொதுமக்கள் பொருட்களை வாங்கி செல்ல குவிந்தனர்.
பூக்களின் விலை வழக்கத்தை விட இரு மடங்கு உயர்வாக இருந்தது.
மாவட்டத்தில் 1,700 இடங்களில் விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைத்து வழிபட போலீசார் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த சிலைகளை பாதுகாக்கவும், விநாயகர் சிலைகளை நீர்நிலைகளை கரைக்க செல்லும் ஊர்வலத்திற்கு பாதுகாப்பு வழங்கவும் 1,800 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுத்தப்பட்டுள்ளனர்.