/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் நகரில் போலீஸ்காரர் வீடு உட்பட 5 வீடுகளில் கொள்ளை கும்பல் கைவரிசை
/
விழுப்புரம் நகரில் போலீஸ்காரர் வீடு உட்பட 5 வீடுகளில் கொள்ளை கும்பல் கைவரிசை
விழுப்புரம் நகரில் போலீஸ்காரர் வீடு உட்பட 5 வீடுகளில் கொள்ளை கும்பல் கைவரிசை
விழுப்புரம் நகரில் போலீஸ்காரர் வீடு உட்பட 5 வீடுகளில் கொள்ளை கும்பல் கைவரிசை
ADDED : டிச 22, 2024 07:01 AM
விழுப்புரம் : விழுப்புரம் நகரில் ஒரே நாள் இரவில், பல வீடுகளில் புகுந்து 5 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஆனந்தம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்,60; திருவண்ணாமலையில் தனது மகள் வீட்டில் தங்கியிருந்து, ரயில்வே துறையில் வேலை செய்து வருகிறார். வாரம் ஒரு முறை, விழுப்புரத்தில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு திருவண்ணாமலைக்கு சென்றார். மர்ம நபர்கள், ராஜ் வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 3 சவரன் நகைகள், ரூ.2 லட்சம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதே தெருவில் வசிப்பவர் அழகப்பன், 35; இவர் வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் பெங்களூரு சென்றிருந்தார். மர்ம நபர்கள் இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 2 சவரன் நகையை திருடிச் சென்றனர்.
கீழ்பெரும்பாக்கம் நந்தீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன், 44; வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருடுபோனது. அதே பகுதி கோபால் தெருவைச் சேர்ந்தவர் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஏட்டு அன்பு,39; இவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக்கை திருடிய மர்ம கும்பல், பைக்கில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை பார்த்து, பக்கத்து தெருவில் பைக்கை நிறுத்தி விட்டு சென்று விட்டனர்.
அதே பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற சிறப்பு சப்--இன்ஸ்பெக்டர் சுந்தர்,61; வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை திருட முயன்றபோது சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் விளக்கை போட்டபோது, வீட்டின் வெளி தாழ்ப்பாள் போட்டுவிட்டு தப்பினர்.
இச்சம்பவங்கள் குறித்து விழுப்புரம் நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் நகரில் ஒரே இரவில், பல வீடுகளில் புகுந்து கைவரிசை காட்டிய, கொள்ளை கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.