நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் கஞ்சா விற்றவாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா மற்றும் போலீசார், நேற்று விழுப்புரம் பைபாஸ் சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிந்தாமணி கிராம சுடுகாடு அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து சோதனை செய்தபோது, அவரிடம் 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவர் அதே கிராமத்தை சேர்ந்த சிவா மகன் தனுஷ், 20; என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், தனுஷை கைது செய்தனர்.

