ADDED : நவ 25, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம் : மரக்காணம் அருகே ஸ்கூட்டரில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் - மரக்காணம் சாலை வன்னிப்பேர் ஏரி அருகே பிரம்மதேசம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 250 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், திருக்கோவிலுார் சங்கர் மகன் மணிகண்டன், 25; என்பதும் இவர் கர்நாடகாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வதும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.