/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோரிமேடு மொரட்டாண்டி சர்வீஸ் சாலையில் குவிந்துள்ள குப்பையால் நோய் பரவும் அபாயம்

ADDED : நவ 26, 2025 08:10 AM

வானுார்: கோரிமேடு முதல் மொரட்டாண்டி வரையிலான சர்வீஸ் சாலையில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பையால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலையில், கோரிமேடு எல்லை முதல் மொரட்டாண்டி வரை சாலையின் இரு பக்கமும் உள்ள சர்வீஸ் சாலையில், ஏராளமான லாரி, பஸ் சர்வீஸ், வணிக நிறுவனங்கள், வாகன உதிரிபாக கடைகள் கடைகள், ஒர்க் ஷாப்புகள், ஓட்டல்கள் என வரிசையாக உள்ளன. குடியிருப்பு பகுதிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த பகுதி வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் குவியும் கழிவுகளை அப்பகுதியில் சாலையோரம் கொட்டி வருகின்றனர்.
குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள், ஓட்டல்களில் வீணாகி போன திண்பண்டங்களை கொட்டுவதால், அப்பகுதியில் மலை போல் குப்பைகள் குவிந்து வருகிறது.
இந்த குப்பைகளை அகற்ற வேண்டிய நெடுஞ்சாலைத்துறை, டோல்கேட் நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை.
இதன் காரணமாக அந்த பகுதியில் பயங்கர துார் நாற்றம் வீசி வருகிறது.
அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்துக்கொண்டு செல் ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவுவதற்குள் குப்பைகளை அகற்றவும், மீண்டும் குப்பைகளை அந்த பகுதியில் கொட்டாத படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.