/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் புறநகர் பகுதிகளில் குப்பை அகற்றும் பணி தீவிரம்
/
விழுப்புரம் புறநகர் பகுதிகளில் குப்பை அகற்றும் பணி தீவிரம்
விழுப்புரம் புறநகர் பகுதிகளில் குப்பை அகற்றும் பணி தீவிரம்
விழுப்புரம் புறநகர் பகுதிகளில் குப்பை அகற்றும் பணி தீவிரம்
ADDED : ஜன 04, 2024 03:47 AM

விழுப்புரம்: தமிழக சட்டசபை 2023--2024ம் ஆண்டிற்கான அரசு மதிப்பீட்டுக்குழுவினர், விழுப்புரம் மாவட்டத்தில், இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர். குழுவின் தலைவர் அன்பழகன் தலைமையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இதனையொட்டி, விழுப்புரம் நகரில் முக்கிய வீதிகள், புறநகர் பகுதிகளில் சாலையோரம் குப்பைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இரு புறமும் இருந்த குப்பைகள் அகற்றும் பணி நேற்று காலை நடைபெற்றது.
இப்பணிகளை, நகராட்சி சுகாதார ஆய்வாளர் சக்திவேல், துப்புரவு பணி மேற்பார்வையாளர் ராமச்சந்திரன் மேற்பார்வையிட்டனர்.