/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் பொது கவுன்சிலிங் இன்று தொடக்கம்
/
விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் பொது கவுன்சிலிங் இன்று தொடக்கம்
விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் பொது கவுன்சிலிங் இன்று தொடக்கம்
விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் பொது கவுன்சிலிங் இன்று தொடக்கம்
ADDED : ஜூன் 04, 2025 12:34 AM
விழுப்புரம் : விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு இன்று (4ம் தேதி) துவங்குகிறது.
கல்லூரி முதல்வர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
கல்லூரியில், இந்த 2025- - 26ம் கல்வி ஆண்டிற்க்கான மாணவர் சேர்க்கை முதற்கட்டமாக, சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களான கலந்தாய்வு 2ம் தேதி தொடங்கியது.
அன்று, விளையாட்டு பிரிவு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை சார்ந்தவருக்கான கலந்தாய்வு நடந்தது.
இதனையடுத்து, பொது கலந்தாய்வு இன்று 4ம் தேதி துவங்குகிறது. காலை 9.30 மணிக்கு பி.ஏ., தமிழ், 5ம் தேதி பி.ஏ., ஆங்கிலம், 6ம் தேதி பி.எஸ்.சி., பி.சி.ஏ., கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல், 9ம் தேதி பி.எஸ்.சி., பி.சி.ஏ., இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி பயன்பாட்டியல் பாட பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கும்.
10ம் தேதி பி.காம்., வணிகவியல். பி.ஏ., வரலாறு, பொருளியல் பாட பிரிவுகளுக்கும், 11 மற்றும் 12ம் தேதி பி.ஏ., வரலாறு, பொருளியல் உள்ளிட்ட கலை பிரிவுக்கும், கலந்தாய்வு நடக்கும்.
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்களின் மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, http://www.aagacvpm.edu.in. கல்லூரி இணையதள முகவரியிலில் தெரிந்து கொள்ளலாம்.
மாணவர்கள், கலந்தாய்வு நாட்களில் காலை 9:30 மணிக்கு முன்னதாகவே சேர்க்கை அரங்கில் இருக்க வேண்டும். தாமதமாக வருபவர்கள் அந்த நேரத்தில் சென்று கொண்டிருக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கைக்காக அனுமதிக்கப்படுவர்.
கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம், 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண்கள் பட்டியல் அசல் மற்றும் 3 நகல்கள், பள்ளி மாற்று சான்றிதழ் அசல் மற்றும் 3 நகல்கள், ஜாதி சான்றிதழ் அசல் மற்றும் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 3, பெற்றோர் புகைப்படம் 1, வங்கி கணக்கு புத்தக முதல்பக்க நகல், ஆதார் அட்டை நகல், சேர்க்கை கட்டணத்துடன்,, கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.