ADDED : ஜூலை 08, 2025 12:24 AM

வானுார் : ஆரோவில் கிராம செயல் வழிக்குழு மற்றும் பிம்ஸ் மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் வி.புதுப்பாக்கம் கிராமத்தில் நடந்தது.
முகாமை, ஆரோவில் கிராம செயல்வழிக்குழு திட்ட இயக்குநர் ஜெரால்டு மோரீஸ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். வி.புதுப்பாக்கம் ஊராட்சி தலைவர் வேலு முன்னிலை வகித்தார்.
முகாமில், பொது நல மருத்துவம், எலும்பு, கண், காது, தொண்டை, குழந்தைகள் நலம், அறுவை சிகிச்சை தொடர்பாக பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.
டாக்டர்கள் கபிலன், ருத்ரேஷ், ஜெயிலா, பிரியதர்ஷினி, கபிலன், மங்கை ஆகியோர் சிகிச்சை அளித்தனர். ஊர் முக்கியஸ்தர்கள் வாசு, ஜானகிராமன், ராதாகிருஷ்ணன், புருேஷாத்தம்மன், சங்கர், சந்திரசேகரன், வீராசாமி உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பிம்ஸ் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் துரைசாமி செய்திருந்தார்.