ADDED : அக் 02, 2024 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : மேல்மைலையனுாரில் துாய்மையே சேவை திட்டத்தில் மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தன.
மேல்மைலையனுாரில் துாய்மையே சேவை திட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது.கவிதை, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.
வெற்றி பெற்றவர்களுக்கு ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் பரிசும், சான்றிதழும் வழங்கி பேசினார்.
இதில் பி.டி.ஓ.,க்கள் சிவசண்முகம், சையத்முகமத், துணை சேர்மன் விஜயலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் செல்வி, ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

