ADDED : ஆக 21, 2025 07:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : பள்ளிக்கு சென்ற, பிளஸ் 2 மாணவியை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
செஞ்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி, தனது கிராமத்திற்கு அருகில் உள்ள மற்றொரு கிராமத்தில் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
கடந்த 15ம் தேதி காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி அன்று மாலை வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் அவரது தாய் செஞ்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.