/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெற்றோர், சகோதரனை இழந்த சிறுமி நிவாரணம் வழங்காமல் அலைகழிப்பு
/
பெற்றோர், சகோதரனை இழந்த சிறுமி நிவாரணம் வழங்காமல் அலைகழிப்பு
பெற்றோர், சகோதரனை இழந்த சிறுமி நிவாரணம் வழங்காமல் அலைகழிப்பு
பெற்றோர், சகோதரனை இழந்த சிறுமி நிவாரணம் வழங்காமல் அலைகழிப்பு
ADDED : ஆக 12, 2025 02:45 AM

வி ழுப்புரம் அருகே பெற்றோர், சகோதரனை இழந்து 2ம் வகுப்பு படித்து வரும் ஏழை சிறுமி, அரசு நிவாரணத்திற்காக அலைகழிப்படும் அவலம் உள்ளது.
புதுச்சேரி அடுத்த செல்லிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மனைவி சத்யா. இவர்களது மகன் ஹரிஹரன், 11; மகள் புவனா, 6; குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஸ்ரீதர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் உடல் நிலை பாதித்து இறந்தார்.
இதனால், சத்யா தனது மகன், மகளுடன் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோயிலுாரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏரியில் குளித்த மகன் ஹரிஹரன் நீரில் மூழ்கி இறந்தார். அதனைத் தொடர்ந்து2 மாதங்கள் கழித்து, அந்த பகுதியில் ஏற்பட்ட தகராறில் சத்யா கொலை செய்யப்பட்டார்.
பெற்றோர், சகோதரனை இழந்து தவித்த சிறுமி புவனாவை, அவரது தாய் வழி தாத்தாவான முருகன், 57; அழைத்து வந்து, விழுப்புரம் அடுத்த நல்லாபாளையம் கிராமத்தில் வளர்த்து வருகிறார். புவனா தற்போது 2ம் வகுப்பு படித்து வருகிறார்.
இதுகுறித்து முருகன் கூறுகையில், 'பெற்றோர், சகோதரனை இழந்த பிள்ளைக்கு, அரசு தரப்பில் வரவேண்டிய நிதியுதவி கிடைக்கவில்லை. அவரை படிக்க வைக்கவும், பராமரிக்கவும் வழியின்றி முதுமையில் நாங்கள் தவிக்கிறோம்.
பெற்றோரை இழந்த குழந்தைக்கு அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை கோரியும், ஏரியில் மூழ்கி இறந்த பேரன் ஹரிஹரன் சாவுக்கும் அரசு வழங்கும் நிவாரணமும் இதுவரை வழங்கவில்லை.
ஓராண்டாக மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. விழுப்புரத்திற்கு வந்த முதல்வர், துணை முதல்வரிடமும் மனு அளித்தும் பயனில்லை, மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளோம்' என்றார்.