/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீபாவளி வாரச் சந்தைகளில் ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனை
/
தீபாவளி வாரச் சந்தைகளில் ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனை
தீபாவளி வாரச் சந்தைகளில் ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனை
தீபாவளி வாரச் சந்தைகளில் ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ADDED : அக் 26, 2024 08:14 AM

செஞ்சி: செஞ்சி மற்றும் வேப்பூரில் நடந்த தீபாவளி வாரச் சந்தையில் ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நேற்று நடந்த வாரச் சந்தை தீபாவளி சிறப்பு சந்தையாக நடந்தது. இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலுார், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் 9,000 ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதிகாலை 3:00 மணிக்கு துவங்கிய சந்தை காலை 9:00 மணி வரை நடந்தது. இதில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
அதில், செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் கருப்பு நிற வெள்ளாடுகளை வியாபாரிகள் விரும்பி வாங்கியதால், இவற்றின் விலை மட்டும் கூடுதலாக இருந்தது. மற்ற ஆடுகள் விலை உயரவில்லை. இதனால், தீபாவளி சந்தையில் கூடுதல் விலை கிடைக்கும் என்பதற்காக வெளியூர்களில் இருந்து ஆடுகளைக் கொண்டு வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
வேப்பூர் சந்தை
கடலுார் மாவட்டம், வேப்பூர் கூட்டுரோட்டில் நடைபெறும் வெள்ளிக்கிழமை வாரச்சந்தையில், ராமநாதபுரம், துாத்துக்குடி, மதுரை, திருக்கோவிலுார் பகுதி வியாபாரிகள் வெள்ளாடு, செம்மறி, மால் வகை ஆடுகளை விற்பனை செய்கின்றனர். இங்கிருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் கேரளாவிற்கு இறைச்சிக்காக ஆடுகள் வாங்கி அனுப்பப்படுகிறது.
நேற்று நடந்த தீபாவளி சந்தையில், 4,000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆடுகளை வாங்க வியாபாரிகளிடையே போட்டி நிலவியதால், ஒரு ஆடு அதிகப்பட்சமாக ரூ.30 ஆயிரம் வரை விலை போனது. நேற்றைய சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.