/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தங்க மோதிரம் எம்.எல்.ஏ., வழங்கல்
/
தங்க மோதிரம் எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : மார் 01, 2024 10:38 PM

விக்கிரவாண்டி : முதல்வர் பிறந்த நாளான நேற்று விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
மகப்பேறு பிரிவில் நேற்று பிறந்த 3 பெண் குழந்தைகள் உட்பட 5 குழந்தைகளுக்கு புகழேந்தி எம்.எல்.ஏ., தங்க மோதிரம், புத்தாடைகளை வழங்கி வாழ்த்தினார். தொடர்ந்து அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் ஜெயபால், டீன் ரமாதேவி, ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், மகப்பேறு துறை தலைவர் ராஜேஸ்வரி, ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, பேரூராட்சி துணைச் சேர்மன் பாலாஜி.
ஒன்றிய செயலாளர் ஜெயபால், கவுன்சிலர் இளவரசி, மாவட்ட தலைவர்கள் பாபு ஜீவானந்தம், ஹரிஹரன், கண்காணிப்பு குழு எத்திராசன், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம், சாவித்திரி பாலு, முன்னாள் கவுன்சிலர் அசோக் குமார், துணை அமைப்பாளர்கள் கலைச்செல்வன், சங்கர், அருள்மொழி, விஜய வேலன், பாண்டு உட்பட பலர் பங்கேற்றனர்.

