/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் 10 பேருக்கு நல்லாசிரியர் விருது
/
மாவட்டத்தில் 10 பேருக்கு நல்லாசிரியர் விருது
ADDED : செப் 05, 2025 08:15 AM
விழுப்புரம்; மாநில நல்லாசிரியர் விருதுக்கு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரா தாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களால் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு வெள்ளி பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டம், வழுதாவூர் அரசு மேல்நிலை பள்ளி, முதுகலை ஆசிரியர் திருமுருகன், ரெட்டணை அரசு மேல்நிலை பள்ளி, முதுகலை ஆசிரியர் பாலசுந்தரம், மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலை பள்ளி, பட்டதாரி ஆசிரியர் இளங் கோவன், வளவனுார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, முதுகலை ஆசிரியர் முருகன், கப்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, தலைமை ஆசிரியர் அருமை செல்வ ம், செ.பூதுார் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, தலைமை ஆசிரியர் விஜயலதா, மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, இடைநிலை ஆசிரியர் லட்சுமி நாராயணசாமி, பக்கிரிதக்கா ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி, ரெட்டணை ேஹாலி ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, முதுகலை ஆசிரியர் மாசிலாமணி, ராஜாம்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, பட்டதாரி ஆசிரியர் நமச்சிவாயம் ஆகிய 10 பேர் மாநில நல்லாசிரியர் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.