/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டமங்கலத்தில் அரசு கலைக்கல்லுாரி ஒன்றிய சேர்மன் கோரிக்கை
/
கண்டமங்கலத்தில் அரசு கலைக்கல்லுாரி ஒன்றிய சேர்மன் கோரிக்கை
கண்டமங்கலத்தில் அரசு கலைக்கல்லுாரி ஒன்றிய சேர்மன் கோரிக்கை
கண்டமங்கலத்தில் அரசு கலைக்கல்லுாரி ஒன்றிய சேர்மன் கோரிக்கை
ADDED : செப் 28, 2025 03:43 AM
விழுப்புரம்: கண்டமங்கலத்தில் அரசு கலைக்கல்லுாரி அமைத்திட வேண்டும் என ஒன்றிய சேர்மன் வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தமிழக முதல்வருக்கு, மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்ப தாவது :
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைத்திட வேண்டும்.
தமிழகம் முழுதும் சட்டசபை தொகுதிவாரியாக ஒரு அரசு கலைக் கல்லுாரி அமைக்கப்படும் என அரசு கொள்கை முடிவாக அறிவித்துள்ளது.
இதன்படி, தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், திருக்கோவிலுார், செஞ்சி, அன்னியூர் ஆகிய தொகுதிகளில் புதிதாக அரசு கலைக் கல்லுாரி துவங்கி, செயல்பட்டு வருகின்றன.
கண்டமங்கலம் பகுதியில் அரசு கல்லுாரி அமைக்கப்படாததால், கிராமப்புற மாணவர்கள் அவதிப்பட்டு வரு கின்றனர்.
அவர்கள், கண்டமங்கலத்தில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள விழுப்புரம், 40 கி.மீ., மற்றும் தொலைவில் உள்ள வானுார் ஆகிய அரசு கல்லுாரிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
கடந்தாண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில், கண்டமங்கலம் வட்டாரத்தில், 538 பேர், கோலியனுார் வட்டாரத்தில் 2522 பேர், வானுார் வட்டாரத்தில் 723 பேர் உட்பட 3 ஆயிரத்து 783 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் விழுப்புரம் மற்றும் வானுார் அரசு கல்லுாரிக்கு சென்று உயர்கல்வி பயில்கின்றனர்.
இப்பிரச்னையை தீர்க்கும் வகையில், கண்டமங்கலம் பகுதியில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லுாரியை துவக்கிட, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.