sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 புதிய பஸ் நிலையத்திற்கு செல்லாத அரசு பஸ்கள் திண்டிவனத்தில் பயணிகள் அவதி

/

 புதிய பஸ் நிலையத்திற்கு செல்லாத அரசு பஸ்கள் திண்டிவனத்தில் பயணிகள் அவதி

 புதிய பஸ் நிலையத்திற்கு செல்லாத அரசு பஸ்கள் திண்டிவனத்தில் பயணிகள் அவதி

 புதிய பஸ் நிலையத்திற்கு செல்லாத அரசு பஸ்கள் திண்டிவனத்தில் பயணிகள் அவதி

1


ADDED : மார் 09, 2026 04:48 AM

Google News

ADDED : மார் 09, 2026 04:48 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை உள்ளிட ஊர்களுக்குச் செல்லும் அரசு பஸ்கள், புதிய பஸ் நிலையத்திற்குள் செல்லாததால் பயணிகள் அவதியடைகின்றனர்.

திண்டிவனம் - சென்னை ரோட்டில், நகராட்சி சார்பில் புதியதாக 27.51 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பஸ் நிலையம் கடந்த 4ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்த பஸ் நிலையத்திற்கு பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் உள்ளே வராமல், ஏற்கனவே திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் செயல்பட்ட பஸ் நிலையத்தின் கீழே நின்று பயணிகளை ஏற்றியும், இறக்கிவிட்டு சென்றது.

இதனால் புதிய பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வரத்து குறைந்ததால் kஸ் நிலையம் வெறிச்சோடியது.

இதுகுறித்து திண்டிவனம் வட்டார போக்குவரத்து அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றதைத் தொடர்ந்து, தற்போது திண்டிவனத்திலிருந்து, விழுப்புரம், புதுச்சேரி, மரக்காணம் செல்லும் தனியார் பஸ்கள் அனைத்தும் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்கிறது.

இதற்கிடையே, புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, செஞ்சி, வேலுார் உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் பெரும்பாலான அரசு பஸ்கள், புதிய பஸ் நிலையத்திற்குள் வராமல், திண்டிவனம் மேம்பாலத்தின் மேல்பகுதியில் பயணிகளை இறக்கவிட்டு, நேரு வீதி, செஞ்சி பஸ் நிறுத்தம் வழியாக செல்கின்றன.

திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும், வழியில் உள்ள கிளியனுார், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு வழியாக செல்கிறது. இதில் அரசு பஸ்கள் திண்டிவனத்திலிருந்து நேராக புதுச்சேரி சென்றால், போக்குவரத்து அதிகாரிகள் வழியில் மடக்கி, சம்பந்த பட்ட அரசு பஸ்களின் டிரைவர், கண்டக்டர்களுக்கு 500 முதல் 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கின்றனர்.

அதேபோல் புதுச்சேரியிலிருந்து திருவண்ணாமலை உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் அரசு பஸ்கள், திண்டிவனம் புதிய பஸ் நிலையத்திற்கு உள்ளே வராமல் சென்றால், போக்குவரத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட டிரைவர், கண்டக்டர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us