/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜூடோ போட்டியில் வெண்கலம் வென்று அரசு கல்லுாரி மாணவர் சாதனை
/
ஜூடோ போட்டியில் வெண்கலம் வென்று அரசு கல்லுாரி மாணவர் சாதனை
ஜூடோ போட்டியில் வெண்கலம் வென்று அரசு கல்லுாரி மாணவர் சாதனை
ஜூடோ போட்டியில் வெண்கலம் வென்று அரசு கல்லுாரி மாணவர் சாதனை
ADDED : நவ 05, 2025 10:54 PM

திண்டிவனம்: திண்டிவனம் அரசு கலைக்கல்லுாரி மாணவர் ஜூடோ போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக உறுப்பு கல்லுாரிகளுக்கு இடையிலான ஆடவர் மற்றும் பெண்கள் ஜூடோ போட்டி கடலுார் ம மாவட்டம், பெரியார் அரசு கல்லுாரியில் நடந்தது. இந்த போட்டியில் விழுப்புரம், கடலுார் , கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலிருந்து அண்ணாமலை பல்கலைக்கழக உறுப்பு கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் வேதியல் துறை மாணவர் ஜெயவேல், 50- 60 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு வெண்கல பதக்கத்தை வென்றார்.
வெற்றி பெற்ற மாணவரை, கல்லுாரி முதல்வர் நாராயணன் பாராட்டினார். இதில் கணித துறையின் தலைவர் கார்குழலி, வேதியியல் துறை தலைவர் கண்ணன், இயற்பியல் துறை தலைவர் லதா, கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் சிவராமன் உடன் இருந்தனர்.