/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாநில போட்டிக்கு தேர்வான ஆயந்துார் மாணவிக்கு பாராட்டு
/
மாநில போட்டிக்கு தேர்வான ஆயந்துார் மாணவிக்கு பாராட்டு
மாநில போட்டிக்கு தேர்வான ஆயந்துார் மாணவிக்கு பாராட்டு
மாநில போட்டிக்கு தேர்வான ஆயந்துார் மாணவிக்கு பாராட்டு
ADDED : நவ 05, 2025 10:53 PM

கண்டாச்சிபுரம்: ஆயந்துார் அரசு உயர்நிலைப் பள்ளி மாவட்ட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு விழா நடந்தது.
ஆயந்துார் அரசு உயர்நயிலைப்பள்ளியில் விழுப்புரம் வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் நளினி தலைமை தாங்கினார்.உதவித் தலைமை ஆசிரியர்கள் ஸ்டெல்லா அன்னபாக்கியம்,வேலு முன்னிலை வகித்தனர்.ஆசிரியர் பாலச்சந்திரன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தடை தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் பரமசிவம்,ராஜஸ்ரீ ஆகியோருக்கு தலைமை ஆசிரியர் சான்றிழ்களை வழங்கினார். தொடர்ந்து மாநில போட்டிக்கு தேர்வான ராஜஸ்ரீயை ஆசிரியர்கள் முனீஸ்வரி, தேவி, நிர்மலாதேவி, கிறிஸ்டினா ஜெயராணி ஆகியோர் பாராட்டி பேசினர்.
ஆசிரியர்கள் ஜூலியட், புருஷோத்தமன் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.உடற்கல்வி ஆசிரியர் ஜான்ஜெயசீலன் நன்றி கூறினார்.

