/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாநில குத்துச்சண்டை போட்டி அரசு கல்லுாரி மாணவர்கள் சாதனை
/
மாநில குத்துச்சண்டை போட்டி அரசு கல்லுாரி மாணவர்கள் சாதனை
மாநில குத்துச்சண்டை போட்டி அரசு கல்லுாரி மாணவர்கள் சாதனை
மாநில குத்துச்சண்டை போட்டி அரசு கல்லுாரி மாணவர்கள் சாதனை
ADDED : ஜூலை 30, 2025 11:15 PM

விழுப்புரம்: மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி மாணவர்கள் வென்று சாதித்துள்ளனர்.
சென்னை, வியாசர்பாடி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன், மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டி நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த குத்து சண்டை வீரர்கள், வீராங்கனையர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியை சேர்ந்த மாணவர்கள் தீபக் 47-50 எடைப்பிரிவில் பங்கேற்று இரண்டாம் இடத்தையும், ஆகாஷ் 50- 55 எடைபிரிவில் இரண்டாவது இடத்தையும், மணிகண்டன் 57-60 எடை பிரி வில் மூன்றாவது இடத்தையும் பிடித்து வென்றனர்.
இவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில், மாணவர் தீபக், அண்ணாமலை பல்கலை சார்பில் தென்னிந்திய அளவிலான பல்கலை அணிகளுக்கு இடையே பஞ்சாப் மாநிலத்தில் நடந்த போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்த மாணவர்களை, முதல்வர் சிவக்குமார், உடற்கல்வி இயக்குனர் ஜோதிபிரியா மற்றும் துறை தலைவர்கள் பாராட்டி வாழ்த்தினர்.