/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மத்திய அரசு நிறுவனத்தில் பயில மாணவர்களுக்கு அரசு நிதியுதவி
/
மத்திய அரசு நிறுவனத்தில் பயில மாணவர்களுக்கு அரசு நிதியுதவி
மத்திய அரசு நிறுவனத்தில் பயில மாணவர்களுக்கு அரசு நிதியுதவி
மத்திய அரசு நிறுவனத்தில் பயில மாணவர்களுக்கு அரசு நிதியுதவி
ADDED : நவ 24, 2024 04:53 AM
விழுப்புரம் : மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு, தமிழக அரசு சார்பில், கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - ஐ.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும், தமிழகத்தைச் சேர்ந்த பிற்பட்ட வகுப்பு, மிகவும் பிற்பட்ட வகுப்பு மற்றும் சீர் மரபு இன மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
அதன்படி, மாணவர் ஒருவருக்கு கல்வி உதவித் தொகையாக கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டணங்களுக்காக மாணாக்கரால் செலுத்திய தொகை அல்லது ஆண்டிற்கு அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை கல்வி உதவித் தொகை வழங்குவதற்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த கல்வி உதவித்தொகைக்கு 2024-25ம் கல்வி ஆண்டில், புதிது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், சென்னை-5 என்ற விலாசத்திலோ விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகியோ அல்லது https/bcmbcw.tn.gov.in/welfschemes.htm#scholarship.schemes என்ற இணைய தள முகவரியிலிருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.