/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மாதிரி பள்ளி திறப்பு விழா
/
அரசு மாதிரி பள்ளி திறப்பு விழா
ADDED : டிச 23, 2025 06:17 AM

விக்கிரவாண்டி: செல்லங்குப்பத்தில் மாவட்ட அரசு மாதிரி பள்ளி மற்றும் விடுதிகளை முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
கெடார் அடுத்த செல்லங்குப்பம் ஊராட்சியில் ஒரே வளாகத்தில் 56.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவ, மாணவியர் விடுதி கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடங்களை நேற்று காலை 10:30 மணியளவில் சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, மாதிரி பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி, ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசினர்.
டி.ஆர்.ஓ., முருகேசன், தாசில்தார் மகாதேவன், டி.இ.ஓ., சேகர், தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் ஒருங்கிணைப்பாளர் நாராயணன், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் ராஜிவ், உதவி செயற்பொறியாளர் பாலாஜி.
உதவி பொறியாளர்கள் பூவிதா, மணிமாறன், ஒன்றிய சேர்மன்கள் கலைச்செல்வி, சங்கீத அரசி ரவிதுரை, துணை சேர்மன் வீரராகவன், பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, மாவட்ட கவுன்சிலர்கள் சிவகுமார், மீனா வெங்கடேசன்.
ஒன்றிய செயலாளர்கள் ராஜா, முருகன், திட்டக்குழு தலைவர் முருகன், வேம்பி ரவி, ஜெயபால், ராஜ், மும்மூர்த்தி, ஒன்றிய தலைவர் முரளி, கவுன்சிலர்கள் கருணாகரன், முகிலன், அருணாச்சலம், செல்வம், துணைச் செயலாளர் சிவராமன்.
மாவட்ட தலைவர்கள் பாபு ஜீவானந்தம், அரிகரன், அமைப்பாளர் சூர்யா, தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுந்தர், பிரதிநிதிகள் அசோக் குமார், சுதாகர், சங்கர், அரசு வழக்கறிஞர் பொன் கோபு, முன்னாள் ஊராட்சி தலைவர் தேவேந்திர குமார், ஊராட்சி தலைவர் இந்திரா மணி, துணை தலைவர் ஆஞ்சலினா தாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்வேலன் நன்றி கூறினார்.

