/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் மானியம்
/
முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் மானியம்
முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் மானியம்
முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் மானியம்
ADDED : டிச 27, 2024 11:14 PM
விழுப்புரம்,; தமிழக அரசு மூலம், முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு, ரூ.3 லட்சம் மானியம் வழங்கப் படுகிறது.
விழுப்புரம் கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த சுதந்திர தின விழா உரையில், தமிழகம் முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என்று அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மருந்தாளர்கள், தொழில் முனைவோர், அரசின் மானிய உதவியுடன் முதல்வர் மருந்தகங்கள் துவங்குவதற்கு விண்ணப்பிக்கலாம்.
விருப்பம் உள்ள பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள், www.mudhalvarmarunthagam.tn.govt.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதில், தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தொழில்முனைவோருக்கு பயிற்சி அளித்து, அரசு மானியமாக ரூ.3 லட்சம் வழங்கப்படும்.
மருந்தகம் அமைப்பதற்கு கூடுதலாக நிதி தேவைப்படும் நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விற்பனைக்கு ஏற்ற ஊக்கத் தொகையும் வழங் கப்படும்.