ADDED : அக் 28, 2024 10:45 PM
விழுப்புரம் : எறையூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.
வானுார் அடுத்த எறையூர் ஊராட்சியில், தமிழக அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து, பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியில், முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதும் முதலில் செயல்படுத்திய 5 திட்டங்கள் குறித்த புகைப்படங்கள், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம், 'மக்களை தேடி மருத்துவம்', 'இல்லம் தேடிக் கல்வித்திட்டம்' உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்த படங்கள் இடம் பெற்றிருந்தன.
மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கிய புகைப்படங்களும், கனமழை மற்றும் வெள்ள மீட்பு பணி ஆய்வு புகைப்படங்கள் உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வையிட்டனர்.